Friday, 30 December 2016

It's best to be with you


இங்கு யாரும் யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்பது உண்மை தான்..

உன்னை நான் காணும் வரை அப்படித்தான் இருந்தேன்..

இன்று நீ இல்லாமல் தினசரி வேலைகள் கூட நடைபெறவில்லை..

காதலுக்கு இவ்வளவு பலம் என்பதை உன்னில் கண்டேன்..

Wednesday, 28 December 2016

Everything is planned

உன்னை காண வேண்டும் என்பது விதி...

உன்னுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்பது ஒரு வாய்ப்பு...

ஆனால் உன் மேல் அளவு கடந்த காதல் கொண்டது இறைவனின் விளையாட்டு ...

அதில் இருந்து மீழாமல் இருப்பது என் காதல் செய்கிற சதி ..

உன்னை விட்டு விலகவும் முடியாது பிரியவும் முடியாது...

It's like completely


காதலிப்பது உன்னையோ இல்லை என்னையோ முழுவதுமாக மாற்றுவதற்கு அல்ல..

இங்கு பிறப்பவர்கள் யாரும் அனைத்தும் தெரிந்தவர்களாக பிறப்பதில்லை..

தவறுகள் செய்தே திருத்தி கொண்டனர்...

தவறுகள் செய்வதால் தான் நாம் மனிதர்கள்..

என் தவறும் மாற்றப்படும் உன் அன்பு இருந்தால்...

Friday, 23 December 2016

Love is a Promise



இன்று பார்த்து நாளை மறப்பதல்ல காதல்...

நாளை பார்ப்பதற்காக இன்று துடிப்பதுதான் உண்மையான காதல்...

காதல் உன்னுள் தோன்றிய பிறகு...

உன்னால் அதை மறக்கவும் முடியாது... உன்னை அது நினைக்காமல் இருக்கவும் விடாது..


It happens only once

மனிதனுக்கு இருப்பதே ஒரு இதயம் ...

அதை ஒருவருக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்...

காதல் நாம் இதயம் போல ...

இருக்கும் போதும் அது ஒருவருக்கு மட்டும் சொந்தம் ..

இறந்த பிறகு அம்மனிதனோடு போகும்...

தானம் செய்ய முடியாத ஒன்று.. காதலை போல...

Thursday, 22 December 2016

Love has time to build the confidence


காதலில் வீழ்வது கடினம் அல்ல ..

காக்கை குருவியும் கூட காதலிக்கும்..

ஆனால் மனிதர்களை போல் வேடிக்கையாக காதலிப்பது இல்லை அவை...

அந்த காதல் வாழ் நாள் முழுதும் .. மண்ணை விட்டு செல்லும் வரை இருக்க வேண்டும்..

காதல் அழிவதில்லை மனிதர்கள் தான் அழிக்கிறார்கள்..

காதல் என்ற பெயரில்...


Wednesday, 21 December 2016

Respect for love



காதல் என்பது கை கோர்த்து நடந்து செல்வதோ... 

இல்லை தனிமையில் உன்னை பற்றி நினைத்து மகிழ்வதோ மட்டும் இல்லை...

அளவு கடந்த காதலும் விட்டுக்கொடுத்தலும் உனக்கான மதிப்பும் கொடுப்பதும் தான்..

உன்னை அளவு கடந்து காதலித்து உனக்காக விட்டுக்கொடுத்து உன்னை மதித்தும் வாழ்கிறேன்..

காதலுக்கான மரியாதையை அளித்து ...

Tuesday, 20 December 2016

The day i saw you



உன்னை நான் பார்த்த அந்த நாள் ..

மனம் சொன்னது என்னிடம்  இவள் தான் உன் என்னவள் என்று...

அன்று முதல் இன்று வரை மனம் உன்னை நினைத்து தவிக்கிறது...

உன்னுடன் வாழவேண்டும் என்று...

Monday, 19 December 2016

Love me again without a fear.



என்னை காதலித்து விடு முழு மனதுடன் ...

நான் உன்னை காயப்படுத்தியதால் விட்டு விலக்காதே..

உன்னை வருத்தப்பட வைத்து விட்டு இங்கு நானும் வலியில் தான் தவிக்கிறேன்...

என்னை நீ ரசித்த அளவிற்கு வேறு யாரும் ரசிக்க இயலாது...

என்னாலும் வேறு பெண்ணை பற்றி நினைக்க முடியாது...

Sunday, 18 December 2016

You didn't teach me.



உனக்கு நான் கற்று கொடுத்து விட்டேன் எப்படி நிம்மதியாக வாழ வேண்டும் என்று ...

ஆனால் எனக்கு நீ கற்று தரவில்லை உன்னை நினைக்காமல் வாழ ..

வாழ்ந்து கொண்டே சாகிறேன்'உன் நினைவுகளால் ...

உனக்கு இது புரியவில்லையா .. உன்னால் தான் என்று..